search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரஸ் பேரணி"

    • காங்கிரஸ் கட்சியினர் பேரணியில் ப.சிதம்பரம் எம்.பி. பங்கேற்றார்.
    • சிவகங்கை மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி நன்றி கூறினார்.

    காரைக்குடி

    ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்தினர்.காரைக்குடி பழைய பஸ் நிலையத்தில் தொடங்கிய இந்த பேரணியை முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் எம்.பி. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    கார்த்தி சிதம்பரம் எம்.பி., மாங்குடி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர். இதில் சிதம்பரம் எம்.பி. பேசுகையில், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் சிறப்பு வாய்ந்த தாகும். இந்த தேசத்தின் ஒற்றுமைக்காக காங்கிரஸ் கட்சி எப்போதும் பாடுபடும்.இந்து முஸ்லீம், இந்து கிறிஸ்தவர் இடையே ஒற்றுமை ஓங்க வேண்டும் என்றார்.

    இதில் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் சுப்புராம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகதாஸ், மாநில மகிளா காங்கிரஸ் துணை தலைவி ஸ்ரீவித்யா கணபதி, மாவட்ட மகளிரணி தலைவி இமய மடோனா, காரைக்குடி நகர தலைவர் பாண்டி, தேவகோட்டை நகர தலைவர் சஞ்சய், மாவட்ட துணை தலைவர் அப்பச்சி சபாபதி, நகர செயலாளர் குமரேசன்.

    மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரவீன், துணை தலைவர் பாலா, நகர்மன்ற உறுப்பினர்கள் ரத்தினம், அமுதா, அஞ்சலிதேவி, ஊராட்சி மன்ற தலைவர்கள் தேவி மாங்குடி, அண்ணா துரை, காமராஜ், ஒன்றிய கவுன்சிலர் கோவிலூர் அழகப்பன், வட்டார தலைவர்கள் கருப்பையா, செல்வம், வர்த்தக அணி ஜெயப் பிரகாஷ் உள்பட நிர்வா கிகள், மகளி ரணியினர், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து ராஜீவ் காந்தி சிலை அருகே நிறைவு பெற்றது. சிவகங்கை மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி நன்றி கூறினார்.

    • சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் நகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.
    • திடீரென மேடை சரிந்து விழுந்தது.இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    ராய்ப்பூர்:

    பிரதமர் நரேந்திர மோடி பற்றி அவதூறாகப் பேசிய வழக்கு ஒன்றில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக மக்களவை செயலகம் அவரது எம்.பி. பதவியை அதிரடியாக பறித்தது. இதன் தொடர்ச்சியாக அரசு பங்களாவை காலி செய்யக்கூறி நோட்டீசும் அனுப்பப்பட்டது.

    ஆனாலும் கோர்ட்டின் இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி காங்கிரஸ் கட்சி மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளது. இந்த சூழலில், அவருக்கு எதிராக அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகி வருகின்றன.

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் 21-ம் நூற்றாண்டின் கவுரவர்கள் என பேசியதற்காக ராகுல் காந்தி மீது மற்றொரு அவதூறு வழக்கு பாய்ந்துள்ளது. பிரதமர் மோடிக்கு எதிராக பேசியதற்காக மற்றொரு அவதூறு வழக்கும் ராகுல் காந்தி மீது பதிவாகி உள்ளது.

    இதற்கிடையே, ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு விவகாரம் தொடர்பாக, சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் நகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. இதற்காக கட்சிக்காரர்கள் அமரும் வகையில் மேடை ஒன்று அமைக்கப்பட்டது.

    இந்நிலையில், திடீரென மேடை சரிந்து விழுந்தது. மேடையில் இருந்த ஆண், பெண் உறுப்பினர்கள் கீழே விழுந்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    ×